'அதெல்லாம்' எனக்குச் சரிப்படாது! - நடிகை ஹாசினி

|


தற்போது எனக்கு கிளாமர் கதாபாத்திரங்கள் பொருந்தாது என்கிறார் நடிகா ஹாஸினி.

ஹாசினி?

'வேள்வி' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஹாசினி.

தனது திரையுலக வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது,

எனது குடும்பத்தில் நான் தான் முதன்முதலாக நடிக்க வந்துள்ளேன். எனது அப்பா ஒரு ரியல் எஸ்டேட் அதிபர்.

சொந்த மாநிலம் ஆந்திரா. ஆனால் சென்னையில் தான் செட்டிலாகிவிட்டோம். நான் தற்போது பிளஸ் டூ படிக்கிறேன். இதுவரை இரண்டு படங்களில் நடித்துள்ளேன்.

வேள்வி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானேன். அடுத்து வந்த அரும்பு மீசை குறும்பு பார்வையில் எனது நடிப்பை பார்த்து ஏராளமானோர் பாராட்டுகின்றனர். இதையடுத்து காதல் அதையும் தாண்டி புனிதமானது என்ற படம் வெளியாகவுள்ளது. படபிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடக்கின்றது.

சினிமாவில் நடிக்கத் தேவையான அனைத்து பயிற்சிகளும் மேற்கொண்டுள்ளேன். தற்போது எனக்கு கிளாமர் கதாபாத்திரங்கள் பொருந்தாது. நடிக்க வேண்டிய அவசியம், நட்சத்திர அந்தஸ்து படங்களில் வாய்ப்பு கிடைத்தால் கிளாமராக நடிப்பேன். கிளாமர் என்பது நடிகைகளால் தவிர்க்க முடியாத ஒன்று.

எனது இயற்பெயர் மோகனா. நடிகை சுஹாசினியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் தான் என் ரோல் மாடல். அவர் மேல் கொண்ட பிரியத்தால் தான் எனது பெயரை ஹாசினி என்று மாற்றிக் கொண்டேன் என்றார்.
 

Post a Comment