7/6/2011 4:31:41 PM
இந்தியில் ஜான் ஆப்ரகாமுடன் 'ஃபோர்ஸ்Õ, அபிஷேக் பச்சனுடன் 'போல் பச்சன்Õ ஆகிய 2 படங்களிலும் தமிழில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் ஜெனிலியா. டோலிவுட்டில் படம் இல்லை. இதையடுத்து இவருக்கு கெட்டிமேளம் கொட்ட குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்களாம். காதலன் ரிதேஷ் தேஷ்முக்குடன் இவரது நெருக்கம் அதிகரித்து விட்டதே இதற்கு காரணம். வெளி உலகுக்கு தெரியாமல் ரகசியமாக சுற்றித்திரிந்த இந்த ஜோடி, இப்போது காதலை வெளிப்படை யாக அரங்கேற்ற தொடங்கி விட்டனர். டொரன்டோவில் சமீபத்தில் நடந்த பட விழாவில் ரித்தேஷ்-ஜெனிலியா ஜோடி பற்றிதான் சினிமா உலகில் பேச்சாக இருக¢கிறது. விழாவுக்கு கை கோர்த்துக்கொண்டு ஜோடியாக வந்தவர்கள், அருகருகே அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டபடி இருந்தனர். ஜெனிலியாவின் அம்மாவும் இவர்களின் அருகே அமர்ந்து காதலுக்கு பச்சை கொடி காட்டிக்கொண்டிருந்தாராம். இது மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்தியில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துவரும் ஜெனிலியா, விரைவில் நடிப்புக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இவர்கள் திருமணம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
Post a Comment