8/12/2011 5:17:19 PM
'கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்Õ பட இயக்குனர் வெங்கி கூறியது: அந்த காலத்தில் கணவன்மனைவிக்குள் பிரச்னை என்றால் அதை தீர்ப்பது கடினம். இன்றைய தலைமுறையினர் கருத்து வேறுபாடு வந்தால் தங்களுக்குள் பேசி பிரிந்து விடுகிறார்கள். இதை இளம் தலைமுறையினர் வரவேற்கின்றனர். இதனால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது இப்படத்தின் கரு. நிர்ணயித்த பட்ஜெட்டில் இதை உருவாக்க முடிவு செய்தேன். ஹீரோ ஹிருதய்ராஜ். ஹீரோயின் அதிதி உள்பட மொத்தம் 16 புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். புதுமுகம் என்றால் டேக் அதிகம் வாங்கி பட்ஜெட் அதிகரிக்கும் என்பதால் கமல்ஹாசன் யோசனைப்படி அனைவருக்கும் ஒரு மாதம் ரிகர்சல் நடத்தப்பட்டது. ஸ்கிரிப்ட் முழுவதையும் சீன் பை சீன் மனப்பாடம் செய்யும் அளவுக்கு பழகியபிறகு ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இதனால் 50 நாட்கள் நடக்க வேண்டிய ஷூட்டிங் 25 நாளில் முடிந்தது.
Post a Comment