காஸ்ட்லி நடிகை கரீனா கபூர் : ஒரு படத்துக்கு ரூ.8 கோடி!

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
காஸ்ட்லி நடிகை கரீனா கபூர் : ஒரு படத்துக்கு ரூ.8 கோடி!

8/11/2011 5:15:45 PM

இந்தியில் ஒரு படத்துக்கு நடிகை கரீனா கபூர் அதிரடியாக ரூ.8 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். இந்தி சினிமா டைரக்டர் மதூர் பண்டார்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க முதலில் கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமானார். பின்னர், கர்ப்பமாக இருப்பதால் நடிக்க முடியாது என்று கூறி ஒப்பந்தத்தில் இருந்து ஐஸ் விலகினார். இதனால் மீண்டும் கதாநாயகி தேடலில் இறங்கினார் டைரக்டர் பண்டார்கர். பிரியங்கா சோப்ரா, வித்யா பாலன், கரீனா கபூர் இந்த 3 பேரில் ஒருவரை ஹீரோயினாக்குவது என்று முடிவு செய்தார். படத்தின் கதையமைப்பு பேஷன் படத்தின் கதையை ஒட்டி இருந்ததால் பிரியங்கா ஜகா வாங்கினார். சில்க் ஸ்மிதாவின் கதையான 'த டேர்ட்டி பிக்சர்' படத்தில் பிசியாக இருப்பதாக கூறி வித்யா பாலனும் மறுத்தார்.

இதனால் மறுபடியும் கரீனாவிடம் பேசினார் பண்டார்கர். தான் ஏற்கனவே நடித்துக்கொண்டிருந்த பாடி கார்ட், ஏஜென்ட் வினோத் படங்களுக்கு கொடுத்திருந்த தேதியை அட்ஜஸ்ட் செய்து இந்த படத்துக்கு தேதி ஒதுக்கினார். டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏக சந்தோஷம். தேதி ஒதுக்கல் விஷயம் முடிந்து அடுத்து சம்பள விஷயத்துக்குவந்தனர். கரீனா பத்து விரலை நீட்டினாராம். ரூ.10 கோடி கேட்டு. பேரம் பேசி ரூ.8 கோடிக்கு முடித்திருக்கிறார்கள். இதையடுத்து, பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை பட்டியலில் முதல் இடத்துக்கு வந்திருக்கிறார் கரீனா கபூர்.




 

Post a Comment