ஜீவாவின் ரௌத்திரம் ரிலீஸ்... பசு தானம் செய்த ரசிகர்கள்!

|


நடிகர் ஜீவாவின் 15வது படம் ரௌத்திரம் வெளியானதையொட்டி பசு தானம் செய்து கொண்டாடினர் அவரது தீவிர ரசிகர்கள்.

கோ பட வெற்றிக்குப் பிறகு ஜீவா நடித்து வெளிவரும் படம் ரௌத்திரம். ஜீவா ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார்.

கோகுல் இயக்கியுள்ள இந்தப் படம் இன்று தமிழகமெங்கும் வெளியானது. இதையொட்டி ஜீவாவின் ரசிகர்கள், சென்னையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

வடபழனி கோயிலில் ஏழைகளுக்கு பசுவுடன் கூடிய கன்றை தானமாகக் கொடுத்தனர். அதன் பிறகு வட பழனி கோயிலிலிருந்து படப்பெட்டியை கமலா தியேட்டர் வரை ஊர்வலமாகக் கொண்டு சென்று, பூசணிக்காய் உடைத்தனர்.

பின்னர் படம் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய ஜீவா தலைமை ரசிகர் மன்ற தலைவர் யுவராஜ் மற்றும் ரசிகர்கள், மானேர் பிடி செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
 

Post a Comment