தெலுங்கானா இல்லேன்னா நானும் சந்திரசேகர் ராவும் தற்கொலை பண்ணிக்குவோம்! - விஜயசாந்தி

|


ஹைதராபாத்:அறிவித்தபடி தெலுங்கானா மாநிலத்தை பிரித்துக் கொடுக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன். எனக்குப் பின் கட்சி தலைவர் சந்திரசேகர ராவும் தற்கொலை செய்து கொள்வார் என்றார் நடிகையும் எம்பியுமான விஜயசாந்தி.

ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் முன்னணித் தலைவரும், எம்.பி.யுமான நடிகை விஜயசாந்தி நேற்று ஹைதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த மாநில மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், "தெலுங்கானா தனி மாநிலத்திற்காக மாணவர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்து வருகிறார்கள். இது நல்ல தல்ல. தெலுங்கானா அமைப்ப தற்கு உயிர்த்தியாகம்தான் தேவை என்றால் நான் தற்கொலை செய்யத் தயாராக இருக்கிறேன். எனக்கு பிறகு கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் தற்கொலை செய்வார்.

தனி மாநில போராட்டத்தை முடக்க மத்திய - மாநில அரசுகள் சதித் திட்டம் தீட்டி செயல்படுகின்றன. அதை தெலுங்கானா பெண்கள் முறியடிக்க வேண்டும். தெலுங்கானா தனி மாநிலம் அமைந்தால், அதை இந்தியாவிலேயே முதன்மை மாநில மாக மாற்றிக் காட்டுவோம்.

மத்திய அரசு பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. அம் மசோதாவை நிறைவேற்ற பெண்கள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்," என்றார்.
 

Post a Comment