ஆம்... திருமணத்துக்கு தயாராக உள்ளேன்! - த்ரிஷா

|


திருமண வதந்திகளுக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் த்ரிஷா. அடுத்த ஆண்டு தனது திருமணம் நடப்பது உண்மைதான் என்றும், அதற்காக தயாராகிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அம்ருத் என்பவரை அவர் திருமணம் செய்வதாக சமீபகாலமாக வந்த செய்திகள் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு த்ரிஷா பதிலளிக்கையில், "அம்ருத் சென்னையைச் சேர்ந்தவர். ஒரு மாதத்துக்கு முன்தான் சிநேகிதர் ஒருவர் மூலம் அறிமுகமானார். என் நட்பு வட்டாரத்தில் அவரும் சேர்ந்துள்ளார். நண் பர்கள் எல்லோரும் ஞாயிற்றுக் கிழமைகளில் சந்திப்போம்.

அம்ருத்தையும் இன்னொருத்தரையும் என் தாய் பார்த்து வைத்திருப்பதாகவும் அவர்களில் ஒருவரை எனக்கு மாப்பிள்ளையாக தேர்வு செய்யப் போவ தாகவும் செய்தி வந்துள்ளன. இதில் உண்மை இல்லை.

நான் யாரிடமும் என் திருமணம் சம்பந்தமாக பேசவில்லை. கடந்த 5 மாதங்களாக ஹைதராபாத்தில் இருந்தேன்," என்றார்.

சரி திருமணம் எப்போது? என்று கேட்டபோது, "நிச்சயம் அடுத்த ஆண்டு நடக்கும். எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை இதுவரை சந்திக்கவில்லை. என்னை பொருத்தவரை நான் திருமணத்துக்கு தயாராகவே இருக்கிறேன்," என்றார்.
 

Post a Comment