மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பிய ரிலையன்ஸ்!

|


அனில் அம்பானியின் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மீண்டும் தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்கு திரும்பியுள்ளது.

இந்த நிறுவனம்தான் சூர்யா நடித்த சிங்கம், மாதவன் நடித்த யாவரும் நலம் போன்ற படங்களை தமிழில் தயாரித்தது.

ஆனால் சில நெருக்கடிகள் காரணமாக அப்போது தமிழ் சினிமா தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டது.

இப்போது மீண்டும் திரைப்பட விநியோகத்தை தமிழில் ஆரம்பித்துள்ளது. பரத் - ரீமா கலிங்கல் நடிக்கும் யுவன் யுவதி படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ரிலையன்ஸ். ஜிஎன்ஆர் குமரவேல் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் வெளியாகிறது.

இதைத் தவிர ஆயிரம் விளக்கு மற்றும் ஒஸ்தி ஆகிய படங்களையும் ரிலையன்ஸ் நிறுவனம் விநியோகிக்கவிருக்கிறது.

தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்துக்கு 27 திரையரங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment