சென்னை சர்வதேச பட விழா போட்டியில் ‘ஆடுகளம்’ உள்பட 12 தமிழ் படங்கள்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை சர்வதேச பட விழா சென்னையில் நேற்று தொடங்கியது. 22ந் தேதி வரை நடக்கிறது. போட்டி பிரிவில் 'ஆடுகளம்' உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் இடம்பெறுகின்றன. 9வது ஆண்டு சென்னை சர்வதேச பட விழா சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். செய்தி ஒளிபரப்பு துறை செயலாளர் ராஜாராம், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இந்தி பட இயக்குனர் சேகர் கபூர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவர் டி.ஜி.தியாகராஜன், பிலிம்சேம்பர் செயலாளர்கள் ஆனந்தா எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்கரா, இந்தோ சினி அப்ரிசியேஷன் தலைவர் கண்ணன், துணை தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் தங்கராஜ், நடிகர்கள் பார்திபன், கணேஷ் வெங்கட்ராம், நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், ரோகிணி, பாத்திமாபாபு, அபர்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக நடிகைகள் கார்த்திகா, தன்ஷிகா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். நேற்று தொடங்கிய பட விழா வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. 9 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் 50 நாடுகளை சேர்ந்த 153 படங்கள் திரையிடப்படுகின்றன. சத்யம், உட்லண்ட்ஸ், உட்லண்ட் சிம்பொனி, ஐநாக்ஸ், பிலிம்சேம்பர் ஆகிய தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படுகின்றன. இவ்விழாவில் போட்டி பிரிவில் தனுஷ் நடித்த 'ஆடுகளம்', விக்ரம் நடித்த 'தெய்வத் திருமகள்' உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் திரையிடப்படுகின்றன. ஜூரியாக பிரதாப்போதன், ரோகிணி, மதன் உள்ளனர். இந்த விழாவுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார்.

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் பற்றிய 'செங்கடல்' என்ற படம் திரையிட நிராகரிக்கப்பட்டதையடுத்து பட விழா நடந்த அரங்குக்கு முன்பு நேற்று இயக்குனர்கள் அருண்மொழி, சீனு ராமசாமி, லெனின். அம்ஷன்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களை குறிக்கும் படமான 'செங்கடல்', சென்னை திரைப்பட விழாவில் நிராகரிக்கப்பட்டது. இதை கண்டித்து நேற்று ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடந்த 9வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர்கள் அருண்மொழி, லெனின், அம்ஷன்குமார் தலைமையில் போராட்டம் நடந்தது.

சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் 9-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. செய்தி துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார். அருகில் செய்தி துறை முதன்மை செயலர் ராஜாராம், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், அக்ஷயா ஹோம்ஸ் தலைவர் சிட்டிபாபு, இந்தி சினிமா இயக்குனர் சேகர் கபூர்.


 

Post a Comment