"ஆல் இன் ஆல் அழகுராஜா" கார்த்தி!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஆல் இன் ஆல் அழகுராஜா' இது தான் கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தின் பெயர். இயகக்குனர் யார் தெரியுமா... எப்போதும் காமெடி படங்களை எடுத்து வரும் நம்ம ராஜேஷ். 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ், அடுத்த கார்த்தியுடன் கை சேர உள்ளார். படத்தின் கதையை ஒரு வரியாக, கார்த்தியிடம் கூறியிருக்கிறார் ராஜேஷ். கதை பிடித்துப் போனதால் ராஜேஷூக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் கார்த்தி. கார்த்தி தற்போது, இயக்குனர் சங்கர் தயாள் இயக்கத்தில் 'சகுனி' படத்திலும், சுராஜ் இயக்கும் பெயரிடாத படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு ராஜேஷ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். வழக்கம் போல், தனது படத்திற்கு வித்தியசமான தலைப்பை தேர்வு செய்யும் ராஜேஷ், இந்த படத்திற்கு 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்று பெயர் வைத்துள்ளார். படத்திற்கு காமெடியாக யாராக இருக்கும்... இதில் என்ன சந்தேகம் நம்ம சந்தானம் தான்...


 

Post a Comment