'7ம் அறிவு' படத்தை தொடர்ந்து தனுஷுடன் '3' படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். இரண்டுமே நகரத்து பின்னணியிலான கதை. இதையடுத்து தெலுங்கில் 'கப்பர் சிங்' என்ற படத்தில் நடிக்கிறார். இந்தியில் வெளியான 'தபங்' படமே தெலுங்கில் இப்பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் கிராமத்து பெண்ணாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பொள்ளாச்சியில் நேற்று நடந்தது. இதுபற்றி அவர் கூறும்போது, ''முதன்முறையாக கிராமத்து பெண்ணாக வேடம் ஏற்றிருக்கிறேன். பொள்ளாச்சியில் ஷூட்டிங். வாவ், சூப்பர் அனுபவம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று பயிர்கள் நிறைந்த வயல் பகுதி. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்த அந்த இடத்தில் பவன் கல்யாணுடன் டூயட் காட்சியில் பங்கேற்றேன். ஒவ்வொரு அங்குல ஷூட்டிங்கையும் ரசித்துக்கொண்டிருக்கிறேன். மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். மொழி எனக்கு தடை கிடையாது'' என்றார்.
Post a Comment