நடிகர் அலெக்ஸ் மரணம்

|

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகர் அலெக்ஸ் மரணம்

5/2/2011 11:43:50 AM

நடிகர் அலெக்ஸ் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 52. கடந்த சில வருடங்களாகவே வயிற்று வலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந் நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே தேனாம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மாலை 4.25 மணிக்கு மரணம் அடைந்தார். இறந்த அலெக்ஸ் திருச்சி துரைசாமி புரத்தில் பிறந்தவர். பொன்மலை ரயில்வே ஊழியரான அவர், நடிப்பின் மீதான ஆர்வத்தால், அந்த பகுதியில் நாடகங்களை நடத்தி வந்தார். 'வள்ளி' படத்தில் குத்துச் சண்டை வீரராக அறிமுகமான அலெக்ஸ், வில்லன், மற்றும் குணச்சித்திர வேடங்களில் 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழ அரசின் கலைமாமணி உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர், சிறந்த மேஜிக் நிபுணராகவும் இருந்தார். அலெக்சுக்கு திரவியமேரி என்ற மனைவியும், பிரின்சி, டீனா என்ற மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மயிலாப்பூர் லஸ் அப்பார்ட்மென்டில் வசித்து வந்தார். அலெக்சின் உடல் திருச்சி எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.

 

Post a Comment