'கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன் என்று சரத்குமார் கூறினார். நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தற்போது, தமிழ், தெலுங்கில் உருவாகும் 'ஹிஸ்ட்ரி' படத்தில் நடிக்கிறேன். மே மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. சுதந்திரத்திற்கு முன், பின் என இரு காலகட்டங்களில் உருவாகும் 'விடியல்', மே மாதம் ரிலீசாகிறது. மலையாளத்தில் உருவான 'டிராபிக்' கை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை ராடான் நிறுவனமும், லிஸ்டனும் வாங்கியுள்ளனர். ஐ பிக்சர்ஸ் சார்பில் தயாராகும் இப்படத்தில், டிரைவராக நடிக்கிறேன். ராதிகா, பிரகாஷ்ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கின்றனர். ரஜினியுடன் சில வருடங்களுக்கு முன்பே நடித்திருக்க வேண்டியது. நாங்கள் சேர்ந்து நடிக்க வேண்டிய படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கவும் முடிவானது. சில காரணங்களால் அந்த வாய்ப்பு அமையவில்லை. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினியின் 'கோச்சடையான்' படத்தில் முக்கிய வேடம் ஏற்கிறேன். போட்டோ ஷூட்டே பிரமிக்க வைத்தது. உலக அளவில் ரஜினிக்கு வரவேற்பு இருக்கிறது. அவருடன் சேர்ந்து நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன்.
Post a Comment