கார்த்தி நடிக்கும் படத்துக்கு 'அலெக்ஸ் பாண்டியன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம், 'அலெக்ஸ் பாண்டியன்'. கார்த்தி ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். மற்றும் சந்தானம், அகன்ஷ்கா பூரி, சனுஷா, மிலிந்த் சோமன், சுமன், மனோபாலா உட்பட பலர் நடிக்கின்றனர். சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் சுராஜ் கூறும்போது, 'மூன்று முகம்' படத்தில் ரஜினிகாந்தின் பெயர் 'அலெக்ஸ் பாண்டியன்'. இன்றும் ரசிகர்களிடையே அந்த பெயருக்கு நல்ல மவுசு இருக்கிறது. அதனால் அந்தப் பெயரை வைத்தோம். கார்த்தி நடித்த படத்திலேயே அதிகப் பொருட்செலவில் தயாராகும் படம் இது. கதைப்படி சந்தானத்துக்கு 2 தங்கைகள். அவர்களை கலாட்டா செய்துகொண்டிருக்கும் கேரக்டரில் கார்த்தி நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கதை. விழுந்து விழுந்து சிரிப்பது போல் படம் இருக்கும். சாலக்குடியில் செட் அமைத்து படமாக்கினோம். இப்போது பின்னிமில்லில் பிரமாண்ட செட் அமைத்துள்ளோம். பெப்சி பிரச்னை முடிந்ததும் ஷூட்டிங் தொடங்கும்' என்றார்.
Post a Comment