எஸ்.பி.பிலிம்ஸ் சார்பில் எஸ்.சத்யமூர்த்தி, எஸ்.மணிமாறன் தயாரிக்கும் படம் 'கண்டதும் காணாததும்'. நடன இயக்குனர் ஜான்பாபு மகன் விகாஷ் ஹீரோ. ஜோடியாக சுவாஷிகா நடிக்கிறார். சீலன் இயக்குகிறார். இதில் புது ஹீரோவுடன் நடிக்க, சுவாஷிகா மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் கூறியதாவது: நல்லவர்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒரு தவறை சொல்லும் படம் இது. இதில் ஹீரோ, ஹீரோயினுக்கு நெருக்கமான காட்சி இருக்கிறது. இதில் நடிக்க பல நடிகைகள் மறுத்தனர். சுவாஷிகா முன்வந்தார். முதல் காட்சியாக நெருக்கமான காட்சியை எடுத்தேன். சுவாஷிகா தைரியமாக நடித்தார். ஹீரோ விகாஷ் கூச்சத்துடன் நடித்தார். பல டேக்குகள் போனது. இரண்டு மணி நேரத்தில் எடுக்க வேண்டிய காட்சியை அன்று மாலை வரை எடுக்க முடியவில்லை. இதனால் ஹீரோயின் கோபம் அடைந்தார். அவரை சமாதானப்படுத்தி மறுநாள் அக்காட்சியை படமாக்கினோம்.
Post a Comment