சினிமா நூற்றாண்டு மாளிகை ஜெயலலிதா திறந்து வைத்தார்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திரைப்பட வர்த்தக சபையின் புதிய கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்திய சினிமா துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி இதற்கு 'சினிமா நூற்றாண்டு மாளிகை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவும் இரண்டாவது மாளிகைக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று நடந்தது.

திரைப்பட வர்த்தக சபை தலைவர் சி.கல்யாண் தலைமையிலும் செயலாளர்கள் ரவி கொட்டாரக்கரா, ஆனந்தா எல்.சுரேஷ் முன்னிலையிலும் முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: அண்ணா துரையால் 15.6.1968ல் தொடங்கி வைக்கப்பட்ட கட்டிடம் இது. இந்த வர்த்தக சபை திரையரங்கில் எம்.ஜி.ஆர் திரைப்படங்களை பார்த்துள்ளார். இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். நானும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். திரைப்படத்துறை வளர்ச்சிக்காவும், அதன் அனைத்து பி£வுகளுக்காகவும் பாடுபடும் இந்த அமைப்பு, பல நூற்றாண்டுகளை கடந்தும் பாடுபட வேண்டும். இதன் இரண்டாவது மாளிகைக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். அதை நானே நேரில் வந்து திறந்து வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நடந்த விழாவில் பொருளாளர் கே.எஸ்.ஸ்ரீனிவாசன், துணை தலைவர்கள் எம்.பாலசுப்பிரமணியன், எடிட்டர் மோகன், பொன்.தேவராஜன், தாமஸ் டிசவுஸ்சா, தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அட்ஹாக் கமிட்டி தலைவர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர், திரைப்பட உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், ஆந்திர சேம்பர் தலைவர் சுரேஷ்பாபு, கர்நாடக தலைவர் சந்திரசேகர ராவ், கேரள தலைவர் சசிகுமார், பெப்சி செயலாளர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 

Post a Comment