சுந்தர்.சி இயக்கி உள்ள படம், 'கலகலப்பு'. விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடித்துள்ளனர். படம் பற்றி சுந்தர்.சி கூறியதாவது: இது எனக்கு 25வது படம். சில படங்களை தயாரித்தேன். விநியோகம் செய்தேன். சில படங்களில் நடித்தேன். வாழ்க்கை நம்மை எப்படி அழைத்துச் செல்கிறதோ, அப்படி போக வேண்டும் என்று நினைப்பவன். சில நடிகர்களுக்காக கதை உருவாக்கி கால்ஷீட் கிடைக்காமல் மற்ற நடிகர்களை கொண்டு அந்த படத்தை இயக்கிய அனுபவம் உண்டு. ஆனால் இந்தக் கதையை உருவாக்கும்போது இந்த கேரக்டருக்கு இவர்தான் என்று மனதில் பதிந்து கொண்டு உருவாக்கினேன். அவர்களே இதில் நடித்தார்கள். அஞ்சலியையும் ஓவியாவையும் கட்டாயப்படுத்தி கிளாமராக நடிக்க வைக்கவில்லை. அவர்களே ஒப்புக் கொண்டுதான் நடித்தார்கள். நான் இயக்கும் படங்களில் பழம்பெரும் நடிகர் ஒருவருக்கு பெரிய கேரக்டர் இருக்கும். இதில் வி.எஸ்.ராகவன் நடித்திருக்கிறார். 90 வயதில் அவர் நடித்தும் பாடியும் இருக்கிறார்.
Post a Comment