தூம் 3 படத்தில் ஆமிர்கானூடன் நடிக்கிறாரா ரஜினி?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'தூம் 3' இந்தி படத்தில் ஆமிர்கானுடன் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக மும்பையில் செய்திகள் வெளியாகியுள்ளன. அபிஷேக் பச்சன், ஜான் ஆபிரகாம், இஷா தியோல் நடித்து 2004-ல் வெளியான படம், 'தூம்'. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியானது. இதையடுத்து இதன் மூன்றாம் பாகம் இப்போது தயாராகிறது. யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் ஆமிர்கான் நடிக்கிறார். இதற்காக தனது உடலை பயிற்சி மூலம் முற்றிலும் மாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் தரப்பில் பேசிவருவதாகக் கூறப்படுகிறது. பட யூனிட் தரப்பில் கூறும்போது, ''ரஜினிக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பும் ஸ்டைலும் எல்லோராலும் ரசிக்கப்படும் விஷயம். அதனால் அவருடன் நடிக்க வேண்டும் என்பது ஆமிர்கானின் விருப்பம். இதில் கேத்ரினா கைபும் நடிக்கிறார். அவரும் ரஜினியுடன் நடிக்க அதிக ஆவல் கொண்டுள்ளார். தயாரிப்பு தரப்பில் அதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளனர். கண்டிப்பாக ரஜினி நடிப்பார்'' என்று தெரிவித்தனர்.


 

Post a Comment