நடிகர் சிரஞ்சீவி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!!

|

Chiranjeevi Is Wanted Accused

பிரபல நடிகரும் காங்கிரஸ் எம்பியுமான சிரஞ்சீவை தேடப்படப்படும் குற்றவாளியாக அறிவித்து பரபரப்பு கிளப்பியுள்ளது ஒசூர் நீதிமன்றம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிட்டார்.

இவரை ஆதரித்து நடிகர் சிரஞ்சீவி பாகலூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாகவும், வாகனங்கள் அதிகம் வைத்திருந்ததாகவும் சிரஞ்சீவி, கோபிநாத் உட்பட 6 பேர் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 4 பேர் சம்மனை பெற்றுக்கொண்டு கோர்ட்டில் ஆஜரானார்கள். எம்.எல்.ஏ. கோபிநாத்தும், சிரஞ்சீவியும் சம்மனையும் வாங்கவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராகவுமில்லை.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சம்மனை வாங்காத குற்றத்திற்காக கோபிநாத்தும், சிரஞ் சீவியும் தேடப்படும் குற்றவாளிகள் என்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது ஒசூர் நீதிமன்றம். நீதிபதி கஜராஜ் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

 

Post a Comment