சினிமா புகைப்படக் கலைஞர் சித்ரா சுவாமிநாதன் மரணம்!

|

Chitra Swaminathan Passes Away

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய சித்ரா சுவாமிநாதன் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 72.

‘தொப்பி சித்ரா’ என்று திரைப்படத் துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களால் அழைக்கப்பட்டவர் சுவாமிநாதன்.

அனைத்து கலைஞர்களுக்கும் மிக நெருக்கமானவராக இருந்தார். திரைத்துறை தொடப்பான பல அரிய புகைப்படங்கள் அவரிடம் உண்டு.

இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பிறகும், சுறுசுறுப்பாக பணியாற்றி வந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமான புகைப்படக்காரர் என்ற பெருமை இவருக்குண்டு. தன்னை எப்போதும் வந்து பார்க்கும் உரிமையை சித்ரா சுவாமிநாதனுக்கு அளித்திருந்தார் சூப்பர் ஸ்டார்.

புகைப்படத் துறையில் நவீனம் புகுந்த காலகட்டத்தில், சித்ரா மட்டும் சாதாரண கேமிராவை வைத்திருப்பதைப் பார்த்த ரஜினி, வெளிநாட்டிலிருந்து நவீன கேமரா ஒன்றை வரவழைத்து தன் பரிசாகக் கொடுத்தார். வெளியில் தெரியாமல் தொடர்ந்து பல உதவிகளை சித்ராவுக்கு அவர் செய்து வந்தார்.

கமல்ஹாஸன், அஜீத் குமார் ஆகியோரிடமும் நெருக்கமாக இருந்தவர் சித்ரா. கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று மரணமடைந்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.

 

Post a Comment