டிவி சீரியல் நடிகையை சித்ரவதை செய்த கணவர்-உதடு கிழிந்தது!

|

Tv Actress Rucha Gujrati Faces Dome

இந்தி சீரியல் நடிகை ருச்சா குஜராத்தியின் கணவரும் மாமனாரும் அவரை அடித்து கொடுமை படுத்துவதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபர் மிட்டல் சாங்கவியை திருமணம் செய்தார் இந்தி சீரியல் நடிகை ருச்சா குஜராத்தி. இவருடைய திருமண வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாகவே புயல் வீசி வருவதாக கிசு கிசு எழுந்தது. தற்போது அந்த தகவல் உண்மையாகியுள்ளது.

ரிச்சாவிற்கு பிரச்சினை தேனிலவின் போதே தொடங்கிவிட்டதாம். அவர்களின் ஹனிமூன் செலவில் பாதியை ரிச்சா வீட்டினர் கொடுக்கவேண்டும் என்று மிட்டல் குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.அப்போது தொடங்கிய பிரச்சினை தற்போது படுக்கை அறையில் அடைத்து வைத்து அடித்து கொடுமைப் படுத்தும் அளவிற்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே தன்னுடைய செலவிற்கு ரிச்சா பணம் கொடுத்து வந்துள்ளார். இருப்பினும் ரிச்சாவின் சேமிப்பில் இருந்து பணத்தை கேட்டு மிட்டலும் அவரது தந்தையும் தலைமுடியை பிடித்து அடித்து கொடுமைபடுத்தியுள்ளனர். இதில் ரிச்சாவின் உதடு கிழிந்துபோனதாகவும் இதனையடுத்தே ரிச்சாவின் மாமியார் போலீசில் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ரிச்சாவின் வீட்டிற்கு வந்த போலீசார் அவரை வீட்டுச் சிறையில் இருந்து விடுவித்தனர். ரிச்சாவின் கணவர் மற்றும் மாமனாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Post a Comment