ராம்சரண் தேஜா - உபாசனா திருமணம்.. விருந்துகள் ஆரம்பம்!

|

Ram Charan Marriage It Is Party Time

சிரஞ்சீவி மகனும் தெலுங்கின் முன்னணி நடிகருமான ராம்சரண் தேஜாவுக்கு வரும் வியாழக்கிழமை ஜூன் 14-ம் தேதி திருமணம் நடக்கிறது. அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவை அவர் மணக்கிறார்.

இரு பெரிய குடும்பத்து மணவிழா என்பதால், அதை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் நடத்தத் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இந்த திருமணத்தையொட்டி, மணமகன், மணமகள் வீட்டார் தத்தமது நெருங்கிய உறவுகள், நண்பர்களை அழைத்து பிரமாண்ட விருந்துகளை அளித்து வருகின்றனர்.

முதல் விருந்தை அளித்தவர் சிரஞ்சீவியின் மைத்துனரும், படத்தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த். மணமகனின் தாய்மாமன் இவர். ஹைதராபாத் புறநகரில் உள்ள பண்ணை வீட்டில் நடந்த இந்த விருந்தில் மத்திய அமைச்சர் ஜெய்பால்ரெட்டி கலந்து கொண்டார்.

மேலும் பிரபல நடிகர் நாகேஸ்வர ராவ் உள்பட முன்னணி நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். அனைவரையும் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, பிரதாப்ரெட்டி ஆகியோர் வரவேற்று உபசரித்தனர்.

 

Post a Comment