அஜீத்ஃபேன்ஸ் சார்பில் பில்லா 2 சிறப்புக் காட்சி - திரையுலகினர் திரண்டனர்!

|

Ajithfans Special Show Billa 2

அஜீத் ரசிகர்களுக்காக இயக்கும் அஜீத் பேன்ஸ் இணையதளம் சார்பில் பில்லா 2 சிறப்புக் காட்சி இன்று காலை ஃபேம் நேஷனல் மல்டிப்ளெக்ஸில் திரையிடப்பட்டது.

தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் திரண்டு வந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.

மங்காத்தாவுக்குப் பிறகு அஜீத் நடித்துள்ள படம் பில்லா 2. பார்வதி ஓமணக்குட்டன், புருனா அப்துல்லா, வித்யூத் ஜம்வால், சுதன்ஷு நடித்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் 2500 அரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.

அஜீத் ரசிகர்களுக்காகவே இயங்கும் இணைய தளமான அஜீத்ஃபேன்ஸ்.காம் சார்பில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி இன்று விருகம்பாக்கம் ஃபேம் மல்டிப்ளெக்ஸில் திரையிடப்பட்டது.

இந்தக் காட்சிக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் திரண்டு வந்தனர். அஜீத்தின் அடுத்த படத் தயாரிப்பாளரான ஏ எம் ரத்னம், இயக்குநர்கள் சற்குணம், மனோஜ்குமார், கேஎஸ் அதியமான், மவுனகுரு புகழ் சாந்தகுமார், திரு, ஜவஹர், ஜீவன், எங்கேயும் எப்போதும் சரவணன், நடிகர்கள் பாண்டு, உமா ரியாஸ், ரியாஸ் கான், மெரினா பாண்டிராஜ், இயக்குநர் விஜயபத்மா, பிடிச்சிருக்கு அசோக், கனகதாரா பிலிம்ஸ் ரமேஷ்குமார், சுந்தரி பிலிம்ஸ் முருகன் உள்பட பலரும் வந்திருந்தனர்.

அஜீத்பேன்ஸ் சார்பில் எஸ் பிரவீண்குமார், மக்கள் தொடர்பாளர் ஏ ஜான் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

 

Post a Comment