சினிமா தொழில் நசிவுக்கு யார் காரணம்? பாடல் வெளியீட்டில் பரபரப்பு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : டி.கே.எம்.பிலிம்ஸ் சார்பில் எஸ்.ஏ.ஜமாலுதீன் தயாரிக்கும் படம் 'அமரா'. அமரன், ஸ்ருதி என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். இமான் இசை. எம்.ஜீவன் இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில், இயக்குனர் ராசு மதுரவன் பேசும்போது, "சினிமாவில் இப்போது எந்த பிரச்னையையும் பேச ஆளில்லை. தயாரிப்பாளர் சங்கம் அனாதையாக இருக்கிறது. சிறிய படங்கள் வெளிவரமுடியாமல் தவிக்கிறது. வாங்கிய கடனுக்கு வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பத்து வருஷத்துக்கு முன்பு படம் எடுத்தவர்கள், தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் இருக்கிறார்கள். இப்போது படம் எடுப்பவர்கள் இருந்தால் எங்கள் வலி தெரியும்'' என்றார்.
இதற்கு பதிலளித்த பிரபு சாலமன், "சினிமாவை சின்னப் படம், பெரிய படம் என்று பிரிக்காதீர்கள். கதை நன்றாக இருந்து மக்கள் விரும்பி பார்த்தால் அது பெரிய படம். அதற்கு உதாரணம் 'மைனா'. அது தீபாவளியன்றுதான் வெளிவந்தது'' என்றார்.
வினியோகஸ்தர்கள் சங்கச் செயலாளர் கலைப்புலி சேகரன் பேசும்போது, "மைனாவை வெளியிட பெரிய தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்தார். எல்லோருக்கும் அப்படி கிடைப்பார்களா? சமீபத்தில், ஒரு பெரிய படத்தை சென்னை, செங்கற்பட்டு ஏரியாவில் அத்தனை தியேட்டரிலும் வெளியிட்டார்கள். பிறகு சின்ன படங்களை எங்கு திரையிட முடியும்? இதற்கு தீர்வு காண போராட்ட குணம் கொண்ட நிர்வாகிகள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேவை'' என்றார்.
விழாவில் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், வெற்றிமாறன், கரு.பழனியப்பன், தியேட்டர் அதிபர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இணை தயாரிப்பாளர் எஸ்.ஷேக் முகம்மது வரவேற்றார். முடிவில், எம்.ஜீவன் நன்றி கூறினார்.


 

Post a Comment