துபாய்: துபாயில் முத்தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்நாடு இன்ஜினியர்ஸ் வீட்டுவசதி நல அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய மனோவின் கோடையில் இன்னிசை மழை நிகழ்ச்சி 29.06.2012 அன்று மாலை துபாய் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவிற்கு இந்திய சமூக நல மைய கன்வீனர் கே.குமார் தலைமை வகித்தார். முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக நடிகர் நிழல்கள் ரவி பங்கேற்று சிறப்புறை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு இன்ஜினியர்ஸ் வீட்டுவசதி நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அமரஜீவா, பாடகர் மனோ உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முத்தமிழ்ச் சங்கத்தின் இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாடகர் மனோவின் தலைமையில் நிழல்கள் ரவி, மாலதி, பூஜா, சுசித்ரா, சப்னம், சந்தோஷ், மனோவின் மகன் சாகிர் ஆகியோர் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். மனோவின் மகன் சாகிர் வெளிநாடுகளிலேயே துபாயில் தான் முதன் முதலாக ரசிகர்களுக்கு மத்தியில் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோபோ சங்கர் மற்றும் அர்விந்த் ஜோடி அரங்கம் அதிரும் வண்ணம் நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்கியது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் தலைமையில் பாரதி மோகன், ஷா, புகாரி, ரவி, சாதிக் பாட்சா, சையத் சர்தார் மற்றும் கண்ணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
லட்சுமி பிரியா மற்றும் அனு அசோக் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
Post a Comment