ரூ 15.6 லட்சத்துக்கு ஏலம் போன இசைமேதை கிஷோர் குமாரின் கடைசி பாடல்!

|

Kishore S Last Song Fetches Rs 15 6 Lakh At Auction

மும்பை: காலத்தை வென்ற இசை மேதை, தன் குரலால் இன்னும் இசை ரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்கும் மறைந்த கிஷோர் குமாரின் கடைசி பாடல் விரைவில் வெளியாகிறது.

இந்தப் பாடலை சமீபத்தில் ஏலம் விட்டபோது, ரூ 15.6 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளனர். கிஷோர் குமாரின் பிறந்த நாளன்று இந்தப் பாடலை பிரமாண்டமாக வெளியிசத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தி திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவக் கிஷோர்தா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கிஷோர் குமார். இவரும் ஆர்டி பர்மனும் இணைந்து வழங்கிய பாடல்கள் இன்னும் கேட்கும்போதெல்லாம் மெய்சிலிர்க்க வைப்பவை.

பல ஆயிரம் பாடல்களைப் பாடி, முன்னணி ஹீரோக்களைவிட செல்வாக்காகத் திகழ்ந்தவர் கிஷோர். இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு காட்டியவர்.

புகழின் உச்சத்தில் இருந்தபோது, 1987-ம் ஆண்டில் திடீரென மரணத்தைத் தழுவினார் கிஷோர் குமார். இவர் கடைசியாக பாடிய பாடல், வெளியிடப்படவில்லை. இந்த பாடலுக்கான உரிமையை அரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 'கிங்டம் ஆப் ட்ரீம்ஸ்' என்ற நிறுவனம் பெற்றிருந்தது.

கிஷோர் குமாரின் பிறந்த நாள் விழா வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அவர் பாடிய கடைசி சினிமா பாடல் நேற்று ஏலத்தில் விடப்பட்டது. இந்த பாடல் ரூ.15.6 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்தப் பாடலை விரைவில் வெளியாகும் ஜூம்ரோ படத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

 

Post a Comment