அப்பாஸ் - அனுஜா ஐயர்- கார்த்திக் குமார் மோதும் தர்மயுத்தம்!

|

Abbas Debuts Tv Through Dharmayutha

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள தர்மயுத்தம் சீரியலில் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார் சினிமா நடிகர் அப்பாஸ். இந்த தொடரில் அப்பாஸ் உடன் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

சின்னத்திரைக்கு சினிமா நட்சத்திரங்கள் வருவது புதிய விசயமில்லை. அந்த வரிசையில் சினிமாவில் ஹீரோக்களாக நடித்த அப்பாஸ், கார்த்திக்குமார் ஆகியோர் தர்மயுத்தம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வருகின்றனர். வெவ்வேறு துருவங்களான இரண்டு வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வித்யாசமான கதைக்களம்தான் தர்மயுத்தம். பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, ஒரு திரைப்படத்திற்கு நிகராக தயாரிக்கப்பட்டுள்ளது

இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்களான அர்ஜூன் (கார்த்திக்குமார்) ராம்மோகன் (அப்பாஸ்) ஆகிய இரண்டு பிரபல வழக்கறிஞர்கள் தங்களது தொழிலில் போட்டியும், முரண்பாடான கருத்துக்களையும் உடையவர்கள். அவர்கள் சந்திக்கும் வழக்குகளை அவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதுதான் கதையின் பின்னணி. இத்தொடரில் அப்பாஸ், கார்த்திக் குமார் உடன் முதல்முதலாக பிரபல திரைப்பட நட்சத்திரங்களான ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரவி ராகவேந்தர், அனுஜா ஐயர், லட்சுமி பிரியா ஆகியோர் சின்னத்திரையில் அறிமுகமாகிறார்கள்.

தர்மயுத்தம் மூலம் ஒரு மெகா தொடரின் ரசனையை புதியதொரு பரிமாணத்திற்கு விஜய் டிவி எடுத்துச்செல்கிறது என்று சொல்லலாம். இந்தத்தொடரை ஏ.எல்.அபினந்திரன் விறுவிறுப்பாகவும், வித்யாசமாகவும், நேர்த்தியாக இயக்கியுள்ளார். தமிழ்த்திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த பிரபல ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா இந்தத் தொடரின் மூலம் தொலைக்காட்சிக்கு வருகை தருகிறார். திரைப்படத்திற்கு இணையான தயாரிப்பு, சிறந்த திரைக்கதை இயக்கத்துடன் தர்மயுத்தம் தொடர் வரும் ஆக்ஸ்ட் 06 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

 

Post a Comment