தீபிகாவுக்கு பதில் ஸ்ருதியைப் பிடித்த கலாஞ்சலி

|

Shruti Hassan Endorses Kalanjali   

பிரபல சேலை பிராண்டான கலாஞ்சலி கடந்த சில ஆண்டுகளாக தனது பிராண்ட் அம்பாசிடராக இருந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை தூக்கிவிட்டு ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பிரபலமான சேலை பிராண்ட்களில் ஒன்று கலாஞ்சலி. கடந்த சில ஆண்டுகளாக அதன் பிராண்ட் அம்பாசிடராக இருந்தவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். கலாஞ்சலி புடவைகளில் தீபிகா கம்பீரமாக போஸ் கொடுத்த பிளெக்ஸ் போர்டுகள் பல்வேறு நகரங்களில் பார்த்திருக்கலாம். இனி அந்த விளம்பரத்தில் தீபிகாவை பார்க்க முடியாது.

தீபிகாவுக்கு பதில் ஸ்ருதி ஹாசனை பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்துள்ளது கலாஞ்சலி. ஏற்கனவே ஸ்ருதி ஐஸ்க்ரீம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விளம்பரத்தில் வருகிறார். தெலுங்கு படமான கப்பார் சிங்கின் வெற்றியால் ஸ்ருதிக்கு பட வாய்ப்புகள் மட்டும் அதிகரிக்கவில்லை விளம்பர வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

அவர் ரவி தேஜாவுடன் பல்பு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் பிரபுதேவாவின் இந்தி ரீமேக்கிலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

 

Post a Comment