மலையாள நடிகர் திலகன் மருத்துவமனையில் அனுமதி!

|

Actor Thilagan Hospitalised

திருச்சூர்: நுரையீரல் பாதிப்பு காரணமாக பிரபல மலையாள நடிகர் திலகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் திலகன், சில நாட்களுக்கு முன் பாலக்காடு அருகே நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் வாணியங்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, நடிகர் திலகன் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Post a Comment