சென்னை: மாண்டலின் ராஜேஷைக் காதலிப்பது உண்மைதான். ஆனால் திருமணம் பற்றி இருவரும் இன்னும் யோசிக்கவில்லை என்று நடிகை மீரா ஜாஸ்மின் கூறினார்.
மேலும், தனக்கும் ராஜேசுக்கும் திருப்பதி கோவிலில் ரகசிய திருமணம் நடந்ததாக வந்த செய்தி பற்றி பதில் கூற விரும்பவில்லை, என்றும் அவர் தெரிவித்தார்.
மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷ், 'பாலோவிங் மை ஹார்ட்' என்ற பெயரில் உருவாக்கிய இசை-வீடியோ ஆல்பத்தை நேற்று கமல்ஹாஸன் வெளியிட்டார்.
இந்த ஆல்பத்தில் ராஜேஷும் அவருடைய காதலி மீராஜாஸ்மினும் நடித்துள்ளனர்.
இந்த விழாவுக்கு மாண்டலின் ராஜேசும், மீராஜாஸ்மினும் ஜோடியாக வந்திருந்தார்கள்.
விழாவில் ராஜேஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கால்களில் விழுந்து ஆசி பெற்றார் மீரா ஜாஸ்மின்.
விழா முடிந்ததும், மீராஜாஸ்மின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கேள்வி: படங்களில் நடித்துக் கொண்டிருந்த நீங்கள், இசை ஆல்பத்தில் நடித்து இருக்கிறீர்களே, ஏன்?
பதில்: இது, சவாலான ஆல்பம். எனக்கு தெரிந்து இதுபோன்று ஒரு ஆல்பம் உருவானதில்லை. அதனால்தான் நடித்தேன்.
கேள்வி: தமிழில் ஒரு படம் கூட உங்கள் கைவசம் இல்லை. மலையாளத்திலும் ஒரே ஒரு படம் மட்டும் நடிப்பதாக கேள்விப்பட்டோம். பட எண்ணிக்கையை குறைத்துக் கொண்டது ஏன்?
பதில்: நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை போய் விட்டது. ஒரு சில படங்கள் மட்டும் நடித்தால் போதும். நல்ல கதை, கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். தமிழில் எனக்கு ஒரு படம் கூட இல்லை என்பது உண்மைதான். மலையாளத்தில், 'லிசமயோட வீடு' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கிறேன். இது, அரசியல் கலந்த கதை. என் கதாபாத்திரத்தை சுற்றியே கதை நிகழ்கிறது.
கேள்வி: உங்களுக்கும், மாண்டலின் ராஜேசுக்கும் திருப்பதியில் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக பரபரப்பான தகவல் வெளியானதே?
பதில்: இப்போது அதுபற்றி பேச விரும்பவில்லை.
கேள்வி: உங்களுக்கும், ராஜேசுக்கும் உள்ள உறவு பற்றி சொல்லுங்கள்?
பதில்:- நானும், ராஜேசும் அளவுக்கு அதிகமாக, ரொம்பவும் காதலிக்கிறோம். திருமணம் பற்றி முடிவு எடுக்கவில்லை,'' என்றார்.
இவ்வாறு மீராஜாஸ்மின் கூறினார்.
Post a Comment