மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது சொந்த ஊரான ஷாபாத்தில் 22 வீடுகளை வாங்கியுள்ளார். வரும் காலத்தில் அந்த இடத்தில் விவசாயம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஆமீ்ர் கான் உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டம் ஷாபாத்தைச் சேர்ந்தவர். ஆனால் தொழில் காரணமாக மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவரது பெரியப்பா நசீர் ஹுசைன் மற்றும் சில உறவினர்கள் தங்கள் வீடுகளை விற்க முயயற்சிக்கின்றனர் என்ற செய்தி ஆமீரின் காதுக்கு வந்தது. பூர்வீக சொத்துக்கள் வேறு யாருக்கோ செல்வதைவிட தானே வாங்கிவிடலாம் என்று அவர் முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் தனது உறவினர்களின் 22 வீடுகளை அண்மையில் வாங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இந்த வீடுகளை வாங்கியது சென்டிமென்ட்டானது. நான் எனது சொந்த ஊரான ஷாபாத்தில் மிகக் குறைவான நாட்களே இருந்துள்ளேன். எனது உறவினர்கள் தங்கள் வீடுகளை விற்க முடிவு செய்துள்ளது பற்றி கேள்விப்பட்டதுடன் அதை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று அவர்களிடம் தெரிவித்தேன். நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன், இப்பொழுதும் கூறுகிறேன் நான் வருங்காலத்தில் விவசாயம் செய்யவிருக்கிறேன். நான் தற்போது வாங்கியுள்ள நிலம் விவசாயத்திற்கு உகந்தது. நான் ஷாபாத்திற்கு சென்று விவசாயம் செய்வேன்.
எங்களின் பூர்வீக வீட்டில் எனது தாய் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் ஒன்றாக வாழ ஆசை. ஆனால் இது எப்பொழுது நடக்கும் என்று தெரியவில்லை. எனது சகோதரர் மற்றும் சகோதரிகளின் பிள்ளைகளும் எங்களுடன் வந்து தங்கலாம் என்றார்.
Post a Comment