நல்லவளாக நடிப்பது ரொம்ப ஈஸி: சினேகா நம்பியார்

|

Serial Actor Sneka Nambiyar

சன் தொலைக்காட்சியில் செல்லமே தொடரில் நடித்து வருபவர் சிநேகா நம்பியார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி தன்னுடைய அமைதியான அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சிநேகா நம்பியார். சிறுவயதில் இருந்து சினிமாத்துறையில் நடித்துவரும் சிநேகா தன்னுடைய சீரியல் பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

சொந்த ஊர் பெங்களுரூ. என் அப்பா, அம்மா பெங்களூருவில்தான் இருக்கிறார்கள். நான் பதினோராம் வகுப்பு படிக்கும் பொழுதே கன்னட சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். நிறைய கன்னட தொடர்களில் நடித்திருக்கிறேன். அதிலிருந்து தெலுங்கு இண்டஸ்ட்ரியில் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் தொடர்களில் நடித்திருக்கிறேன். தமிழில் ஸேன் மீடியாவின் "அகல்யா' தொடரில்தான் அறிமுகம் ஆனேன்.

தமிழில் நடிக்க வந்தவுடனேயே எனக்கு திருமணம் ஆகிவிட்டது. என் கணவர் குடும்பத்தினர் சென்னையை சேர்ந்தவர்கள். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் மாமியார், மாமனார், என் கணவர் என எல்லாருமே கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம். கணவர் குடும்பத்தினர் அளிக்கும் சப்போர்டில்தான் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன்.

செல்லமே தொடரில் ராதிகா மேடம்கூட சேர்ந்து நடிப்பது இரட்டிப்பு சந்தோஷமா இருக்கிறது. படப்பிடிப்பில் பார்த்தால் ஒரு குடும்பமாக ஜாலியா இருக்கும். அதில் வருவது போன்று ஒரு பாந்தமான கேரக்டரில் நான் இதுவரை வேறு எந்த தொடரிலும் செய்யவில்லை. கடந்த சில நாட்களாக என் டிராக் அவ்வளவாக வரவில்லை. மற்றபடி இந்தத் தொடரில் நடிப்பது ரொம்ப நல்ல அனுபவம்.

சீரியலில் நல்லவளாக ஈசியா நடித்து விடலாம்.ஆனால் வில்லியாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. வில்லத்தனமான கேரக்டர் தான் நம் திறமையை வெளிக்கொண்டு வரும். அதே சமயம் பாஸிட்டீவ் ரோல் வழக்கமான கேரக்டராக இருந்தாலும் ரசிகர்களின் அனுதாபமும் ஆதரவும் நமக்கு நிறைய கிடைக்கும். அதனால ஒரே மாதிரியான கேரக்டராக இல்லாமல் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும். ஒரு தொடரில் நெகட்டீவ் என்றால் அடுத்த தொடரில் பாஸிட்டீவாக நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. என் குடும்பத்தினரின் விருப்பமும் அதுதான் என்று கூறிவிட்டு ஷூட்டிங் செல்ல தயாரானார் சிநேகா.

 

Post a Comment