24 மணி நேர 'கேப்டன் நியூஸ்' சானல் - விஜயகாந்த் தொடங்கிவைத்தார்

|

Vijayakanth Launches 24 Hour Captain News Channel

சென்னை: கேப்டன் மீடியா குழுமத்தின் 24 மணிநேர செய்திச்சேனலான கேப்டன் நியூஸ் சானலை, தேமுதிக தலைவரும், கேப்டன் மீடியா குழும தலைவருமான விஜகாந்த் குத்துவிளக்கேற்றி அதன் தொழில் நுட்பப் பணிகளை தொடங்கி வைத்தார்.

கேப்டன் மீடியா குழுமத்தில் இருந்து ‘உள்ளது உள்ளபடி உடனுக்குடன்' என்ற முழக்கத்துடன் களம் இறங்கியுள்ளது 24 மணி நேர செய்திச் சேனல். கடந்த சில மாதங்களாக கேப்டன் நியூஸ் சேனல் சோதனை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இன்று அதிகாரப்பூர்வமாக முழுநேர ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.

இந்த சேனலுக்கான லோகோவை கேப்டன் மீடியா அலுவலகத்தில் காலை 9.35 மணியளவில் விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். குழுமத்தின் மற்றொரு தலைவரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா குத்துவிளக்கேற்றினார்.

உலகம் முழுவது‌ம் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, உள்ளது‌ உள்ளபடி உடனு‌க்குடன் என்ற லட்சியத்தோடு அனைத்து‌ செய்திகளையும் தாங்கி கேப்டன் நியூஸ் தொலைக்காட்சி இன்று‌ முதல் தனது‌ சேவையை தொடங்கியுள்ளது.

இதில் செய்திகளுடன் முக்கிய பிரச்சனைகளுக்கு நேர்முகத்து‌டன் நல்ல விளக்கம் கொடுக்கவும், அனைத்து ‌ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்களின் கலந்து‌ரையாடல் நிகழ்ச்சியும் மற்று‌ம் பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் நியூஸ் சேனலின் செய்திகளை பிளாக்பெர்ரி, இணையதளத்திலும், டிவிட்டரில் பேஸ்புக்கில் காணலாம் என்று கேப்டன் மீடியா குழுமத்தினர் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே சன் நியூஸ் தொடங்கி சத்யம் வரை 24 மணி நேர செய்தி சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது இவற்றுடன் கேப்டன் நியூஸ் சேனலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் நியூஸ் சானலின் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் முகவரிகள்...

http://captainnews.net/
http://www.facebook.com/Captainnewstv
https://twitter.com/captainnewstv

 

Post a Comment