உலகுக்கோர் 'நற்செய்தி'... சினிமாவில் நடிக்கிறார் பூனம் பாண்டே!

|

Hollywood Cinematographer Capture Poonam Pande
மும்பை: அப்பாடா... பூனம் பாண்டே பட்ட கஷ்டத்துக்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது... எஸ்... அவர் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார். வழக்கம் போல கவர்ச்சியில் வெளுத்துக் கட்டப் போகிறார். அவரது கவர்ச்சியை 'தரோ'வாக படம் பிடிக்க ஹாலிவுட்டிலிருந்து ஒரு கேமராமேனை புக் செய்துள்ளனராம்.

குமார் மங்கத் இயக்கும் இப்படத்தில் பூனம் பாண்டேவின் மொத்த அழகையும் நிரப்பத் திட்டமிட்டுள்ளனராம். இதனால்தான் உள்ளூர் 'ஆட்டக்காரர்கள்' சரிவர மாட்டார்கள் என்பதால் ஹாலிவுட்டிலிருந்து 'வெளியூர் ஆட்டக்காரரான' கேமராமேன் ஜேம்ஸ் பவுல்ட்ஸை கூட்டி வருகின்றனராம்.

படம் முழுக்க இதுவரை பார்த்திராத பூனம் பாண்டேவைப் பார்க்கலாமாம். அப்படி ஒரு அழகு படத்தில் மிளிருமாம். ஈகிள் ஹோம் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

பவுல்ட்ஸ் ஹாலிவுட்டில் 30க்கும் மேற்பட்ட படங்களில் கேமராமேனாக இருந்திருக்கிறாராம். டார்க் ஹன்டர்ஸ், டூப்ளிசிட்டி, அப்சலூட் பவர் உள்ளிட்ட சில படங்களின் டைட்டில் காட்சிகளை படம் பிடித்திருக்கிறாராம்.

தற்போது இப்படம் தொடர்பான படப்பிடிப்புக்கு முந்தைய ஒர்க்ஷாப் நடந்து வருகிறதாம். அதில் பூனம் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறாராம். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். விறுவிறுப்பாக படத்தை எடுத்த முடிக்கத் திட்டமிட்டுள்ளனராம்.

டிவிட்டரில் ஏற்கனவே பிரளயத்தைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் பூனம். இந்த நிலையில் பெரிய திரையில் தனது பிரமாண்டக் கவர்ச்சியை கொட்டிக் கவிழ்க்கப் போகிறார்...

நாயகி பூனமே நீங்க நல்லவரா, கெட்டவரா....?!
 

Post a Comment