சென்னை: கற்பழித்த பெண்ணையே நான்காவது மனைவியாக்க முயற்சிக்கிறார் என்று நடிகர் செல்வராஜாவின் 3வது மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் செல்வராஜா(55). அவர் என் உள்ளம் உன்னை தேடுதே என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தார். அவரது மனைவி அன்னை ரீட்டா (24).
இந்நிலையில் ரீட்டா வடபழனி காவல் நிலையத்தி்ல் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், செல்வராஜா ஏற்கனவே தனக்கு 2 முறை திருமணமானதை மறைத்து என்னை மணந்தார். என்னை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து வந்தார். இந்நிலையில் 4வதாக ஒரு பெண்ணை மணக்கவிருக்கிறார். அவரிடம் எந்த பெண்ணும் சிக்கிவிடாமல் காப்பாற்றுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகார் குறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் ரீட்டாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
நான் எனது கணவர் செல்வராஜாவுக்கு உறவுப்பெண். எனது 16வது வயதில் நான் எனது கணவரிடம் அவரது கிளினிக்கில் வேலைக்கு சேர்ந்தேன். அவர் என்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டார். ஆனால் என்னை கைவிடாமல் வீட்டிலேயே தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார். அவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருக்கும் விவரம் அப்போது எனக்கு தெரியாது. பின்னர் அதுபற்றி தெரிந்தாலும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனால் காலப்போக்கில் அவர் எனது நடத்தையில் சந்தேகப்பட்டார். வெளியில் சென்றுவிட்டு வந்தவுடன், என்னை அடித்து உதைத்து துன்புறுத்துவார். நான் வெளியில் சென்றிருந்தபோது, யாருடன் படுத்தாய் என்று கேவலமாக பேசுவார். வீட்டில் பொருத்தி இருந்த ரகசிய கேமராவை பார்ப்பார். அவரது அடி-உதை சித்ரவதையை தாங்க முடியாமல் நான் தவித்தபடி இருந்தேன்.
இந்நிலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணையும் கெடுத்து பாழாக்கிவிட்டார். அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் எனது கணவரை கைது கூட செய்தனர். இப்போது அதே மஞ்சுவை 4வது திருமணம் செய்ய எனது கணவர் முயற்சிக்கிறார். அதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் எனது கணவரிடம் இருந்து, என்னை விடுவிக்க வேண்டும். அவர் வழியில் அவர் போகட்டும், என்வழியில் அவர் குறுக்கே வராமல் எனக்கு உரிய பாதுகாப்பு உத்தரவாதம் பெற்றுத்தர வேண்டும் என்று அவர் அதில் தெரிவி்ததுள்ளார்.
நேற்று செல்வராஜாவையும், ரீட்டாவையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களை ஒன்றாக உட்கார வைத்து போலீசார் கவுன்சிலிங் கொடுத்தனர். ஆனால் ரீட்டா தனது கணவருடன் செல்ல மறுத்துவிட்டார். மேலும் செல்வராஜாவும் ரீட்டாவை விட்டுப் பிரிய சம்மதித்ததுடன் அவரது வாழ்க்கையில் இனி தலையிட மாட்டேன் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் பிரிந்து சென்றனர்.
முன்னதாக 4வது திருமணம் குறித்து செல்வராஜாவிடம் கேட்டதற்கு, தான் யாரையும் திருமணம் செய்ய முயற்சிக்கவில்லை என்றார்.
+ comments + 1 comments
Ethukkuppa intha maananketta polappu !!!!
Post a Comment