இன்று முதல் ரஜினியின் 'சிவாஜி 3 டி' ட்ரெயிலர்!

|

Sivaji 3 D Trailor From Today

ரஜினி, ஸ்ரேயா ஜோடியாக நடித்து 2007-ல் ரிலீசான ‘சிவாஜி' - தி பாஸ் படம், அடுத்த மாதம் புதுப் பொலிவுடன் வெளியாகிறது.

ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்தது. ரூ.80 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் அனைத்துவித உரிமைகளையும் சேர்த்து ரூ. 150 கோடிக்குமேல் வசூல் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘சிவாஜி' படத்தை தற்போது ‘3டி' தொழில்நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கின்றனர் ஏவிஎம் நிறுவனத்தினர். கடந்த சில மாதங்களாக ‘சிவாஜி'யை 3டி-யில் மாற்றும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

அடுத்ததாக ‘சிவாஜி 3டி' பட டிரெய்லர் வெளியிட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடக்கிறது. இதில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் பங்கேற்கின்றனர்.

ஒரு புதிய படத்துக்கே உரிய அத்தனை பரபரப்புடனும் சிவாஜியை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறது ஏவிஎம் நிறுவனம்.

 

Post a Comment