சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி என்றாலே சினிமா நடிகர், நடிகையர்களின் பேட்டிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஆனால் ஜெயா டிவியில் சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் பேட்டி ஒளிபரப்பாக உள்ளது.
சதுரங்கத்தில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த். அவர் பெற்ற வெற்றியின் மூலம் நம் தேசத்தின் பெருமை உலகளவில் உயர்ந்தது. ஆனந்தின் சாதனைகளையும், வெற்றிகளையும் இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் ஜெயா டிவியில் சிறப்பு பேட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக விஸ்வநாதன் ஆனந்தின் பேட்டி ஒளிபரப்பாக உள்ளது. அதில் `இன்றைய இளைய சமுதாயம், நாளைய வெற்றிப்பாதையில் எப்படி பயணிக்க வேண்டும் என்பதில் தொடங்கி, விடாமுயற்சி எப்படி தன்னை உயர்த்தியது என்பது வரை அவர் விவரிக்கிறார்.
சுதந்திர தினத்தன்று ஜெயா டிவியில் காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது, இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. சினிமா நடிகர்களின் பேட்டியில் லயித்து விடாமல் இதுபோன்ற சாதனை மனிதர்களின் பேட்டிகளை கண்டு ரசிக்கலாம்.
Post a Comment