அடையாளத்தில் அசத்திய ‘லொள்ளு சபா’ மனோகர்

|

Adayalam Lollu Shabha Manokar Share His Experience

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அடையாளம் நிகழ்ச்சி சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இன்றைக்கு பிரபலங்களாக உயர்ந்தவர்களைப் பற்றிய நிகழ்ச்சி.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அறிமுகம் ஆன சந்தானம், லொள்ளு சபா மனோகர், நீயா நானா கோபிநாத், அது இது எது சிவகார்த்திகேயன் போன்றோர் இன்றைக்கு பிரபலங்களாக உயர்ந்துள்ளனர்.

தங்களை அடையாளப்படுத்திய விஜய் டிவியுடன் தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றனர். இந்தவாரம் லொள்ளு சபா மனோகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மனோகரின் பேச்சும், கை சைகையும் சிறு குழந்தைகளுக்குக் கூட பிடித்தமானது.

பல்வேறு கெட் அப் களில் சந்தானத்துடன் இணைந்து அவர் நடத்திய லொள்ளு சபா நிகழ்ச்சிகளை ரீவைண்ட் செய்தனர். அந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவின் போது நடந்த சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார் மனோகர்.

மனோகரைப் பற்றி அவருடன் பணியாற்றியவர்களும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர்களுக்காக எந்த ஒரு தொலைக்காட்சி சேனலும் செய்யாத அட்டகாசமான நிகழ்ச்சி அடையாளம் என்றால் மிகையாகாது.

 

Post a Comment