இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மானை மலையாளப் படம் ஒன்றில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.
மலையாள இயக்குனர் ஷஜூன் கரியால் 5 நண்பர்களை மையமாக வைத்து படம் ஒன்றை எடுக்கிறார். இதில் பிஜு மேனன், லால், சுரேஷ் கிருஷ்ணா, சுகுமார் மற்றும் சுனில் பாபு ஆகியோர் 5 நண்பர்களாக நடிக்கின்றனர். படத்தை பிஜு மேனனும் சேர்ந்து தயாரிக்கிறார். படத்தில் பிஜு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ட்ரூப்பில் இருக்கிறார்.
தனது கதாபாத்திரம் தத்ரூபமாக இருக்க அவர் ரஹ்மானை கெஸ்ட் ரோலில் வந்து செல்லுமாறு கேட்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் சில காட்சிகள் சென்னையில் உள்ள ரஹ்மானின் ஸ்டுடியோவில் படமாக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
ரஹ்மான் மணிரத்னத்தின் கடல், சங்கரின் ஐ மற்றும் தனுஷின் மரியான் ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.
Post a Comment