முதல் மூன்று நாட்களில் ரூ 1.60 கோடி வசூலித்த முகமூடி!

|

Mugamoodi Collects Rs 1 56 Cr Opening Week End   

எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், முகமூடிக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம், முதல் மூன்று தினங்களில் ரூ 1.60 கோடியை வசூலித்துள்ளது.

படம் குறித்து நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்ததால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கிட்டத்தட்ட ஹவுஸ்புல்லாக ஓடியிருக்கிறது இந்தப் படம்.

சென்னையில் மட்டும் 25 அரங்குகளில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. புறநகர்களிலும் கணிசமான அரங்குகளில் வெளியாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை விநியோகஸ்தர்களின் பங்காக ரூ 90 லட்சம் கிடைத்துள்ளது.

இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமம் சார்ந்த ஒற்றைத் திரையரங்குகளில் நான்காம் நாளிலிருந்து கூட்டம் குறையத் தொடங்கினாலும், பாதி அரங்காவது நிறைவது வெளியீட்டாளர்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.

போட்டிக்கு வேறு படம் இல்லாததால், இன்னும் ஒரு வாரத்துக்கு இந்தப் படத்துக்கு வசூல் ஓரளவு நன்றாகவே இருக்கும் என நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை மன்னாரு அல்லது பாகன் அல்லது சுந்தரபாண்டியன் தகர்க்குமா பார்க்கலாம்!

முகமூடி - சினிமா விமர்சனம்

 

Post a Comment