7 சி ஸ்டாலின் சார் மாதிரி யார் இருக்கா?

|

7c Serial Stalin Sir

ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் ஆசிரியர்களை சிறப்பிக்க முடிவு செய்துள்ளது விஜய் டிவி. பள்ளிகளில் சிறந்த ஆசிரியராக உள்ளவரைப் பற்றி விஜய் டிவிக்கு எழுதி அனுப்பினால் 7 சி தொடர் குழுவினர் அவர்களை தேடி வந்து சிறப்பிக்க உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 7 சி நெடுந்தொடர் பள்ளி மாணவர்களின் கலாட்டாக்கள், ஆசிரியர்களின் சிறப்பினை எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ளது. 7 சி வகுப்பில் படிக்கும் மாணவர்கள், அந்த வகுப்பு ஆசிரியர் ஆகியோரை மையப்படுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

7 சி வகுப்பின் ஆசிரியர் ஸ்டாலின் அன்பான, பாசமான ஆசிரியர். மாணவர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். இதன் காரணமாகவே ஸ்டாலின் சார் மாதிரி நமக்கும் ஒரு ஆசிரியர் வேண்டுமே என்று ஏங்க வைத்துக்கொண்டிருக்கிறார். பள்ளியில் இன்ஸ்பெக்சன் நடக்கும் நாளன்று தலைமை ஆசிரியருக்கே உடல் நடங்குகிறது.

"எனக்கு காய்ச்சல் வரா மாதிரி இருக்கு நீ இன்றைக்கு பாத்துக்கோயேன்" என்று துணை தலைமை ஆசிரியரிடம் சொல்கிறார்.

"அப்படின்னா நீங்க யூத்துக்கு வழிவிட்டு நீங்க ஒதுக்கிக்கோங்க" என்று கூறுகிறார் துணை தலைமை ஆசிரியர்.

ஆனால் ஸ்டாலின் சார் தங்களின் குழந்தைகளுக்கு கூறும் அறிவுரை அனுபவப்பூர்வமாய் இருக்கிறது.

"தெரிந்த கேள்விகளுக்கு தெளிவாய் பதில் சொல்லுங்கள். சந்தேகமாய் இருக்கும் கேள்விகளுக்கு இதுக்கு பதில் இதுதான்னு தெரியலை இந்த கேள்வி பற்றி எனக்கு சந்தேகமாய் இருக்கிறது என்று தைரியமாக கூறுங்கள்" என்று அறிவுரை வழங்கிறார்.

நிஜமாகவே ஸ்டாலின் சார் என்றால் ஏன் மாணவர்களுக்கு ஏன் பிடிக்கிறது என்பதை அந்த எபிசோட் உணர்த்தியது.

இதுபோன்ற சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களை சிறப்பிக்க 7சி குழுவினர் போட்டியை அறிவித்துள்ளது. அன்பான ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசுகளை வழங்க இருக்கின்றனர்.

இது தொடர்பான விவரங்களை சுட்டி விகடன், தினமணி, உள்ளிட்ட நாளிதழ்களில் தெரிந்து கொள்ளலாம்.

 

Post a Comment