ஐஸ்வர்யா ராய் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறார்?

|

What Is Wrong With Aishwarya Rai   

மும்பை: கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோவில் ஐஸ்வர்யா ராய் அழகின்றி காட்சியளி்க்கிறார்.

பாலிவுட் நடிகை ஜஸ்வர்யா ராய் குழந்தை பெற்றதற்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை. ஆனால் கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடை விளம்பரப் படங்களில் வருகிறார். அண்மையில் அந்த கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோவில் ஐஸ்வர்யா ராஜா காலத்து பெண்கள் போன்று உடையணிந்து à®'ரு கையில் தாமரைப் பூவுடனுடம், மறுகையை உயர்த்தியவாறு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த போட்டோவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஐஸ் அழகின்றி காணப்படுகிறார். அதில் அவரது முகத்தைப் பார்ப்பவர்கள் இவ்வளவு கேவலமாக இருப்பது நம்ம அழகு ராணி ஐஸா என்று வியக்கின்றனரே தவிர அவர் அணிந்திருக்கும் நகைகளை யாரும் பார்ப்பதாகத் தெரியவில்லை.

பிரசவத்திற்குப் பிறகு ஊதிவிட்டார் என்று கூறப்பட்ட ஐஸ் இந்த போட்டோவில் சிக்கென்று இருந்தாலும் அவரது முகத்தைப் பார்க்க பயமாக இருக்கிறது. ஐஸ்வர்யாவின் அழகு முகத்தை மணிக்கணக்கில் பார்த்து ரசிக்கும் அவருடைய ரசிகர்களால் கூட இந்த போட்டோவை 2 நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியாது போன்று.

முன்னதாக இதே கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பர போட்டோவில் சிவப்பு உடையணிந்து அழகு தேவதையாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னாச்சு ஐஸ், இப்படி à®'ரு போட்டோவா?

 

Post a Comment