சிங்கம் 2... அனுஷ்காவுடன் நடிக்கத் தயங்குகிறாரா ஹன்சிகா?

|

Hansika S Dilemma On Singam 2   

சென்னை: சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவுடன் இரண்டாவது நாயகியாக நடிக்க ஹன்சிகா தயங்குவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் பூஜை நேற்றுதான் சென்னையில் நடந்து, படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தில் இரு நாயகிகள். முதல் நாயகி அனுஷ்கா. இரண்டாவதுதான் ஹன்சிகா. வரிசையாக வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி ஹிட் படங்களில் நடித்துள்ளார். இப்போது வாலு, வேட்டை மன்னன் என பெரிய படங்களில் சோலோ நாயகியாக நடிக்கிறார். இப்படி முன்னணியில் உள்ள தன்னை இரண்டாவது நாயகியாக்கியதில் ஹன்சிகாவுக்கு ஏக வருத்தமாம்.

இரண்டாவது நாயகியாக நடித்தால், அந்த இமேஜ் தான் அடுத்து ஒப்பந்தமாகும் படங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், எப்படி இந்தப் படத்தைத் தவிர்ப்பது என அவர் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நடிகையின் இந்த குழப்பத்தை அறிந்த இயக்குநர், என் படத்தில் ஸ்கிரிப்டுக்குதான் முக்கியத்துவம். அதன் படி இருவருக்குமே சமமான வேடங்கள்தான்... கவலை வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.

 

Post a Comment