சென்னை: 180 ஹீரோ சித்தார்தை காதலிக்கவில்லை என்று நடிகை பிரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியா ஆனந்த் தான் நடித்துள்ள இங்கிலீஷ் விங்கிலீஷ் பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார். இதற்கிடையே அவர் தன்னுடன் 180 படத்தில் நடித்த சித்தார்த்தை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து பிறரிடம் கேட்பதற்கு பதில் பிரியாவிடம் கேட்டுவிடலாம் என்று நினைத்து கேட்டபோது அவர் கூறுகையில்,
நானும், சித்தார்த்தும் சேர்ந்து 180 படத்தில் நடித்தோம். அவரைப் பார்த்தே மாதக் கணக்கில் ஆகிறது. ஆனால் அவர் என்னுடைய நல்ல நண்பர் என்றார்.
அந்த படத்திற்கு பிறகு பிரியாவும், சித்தார்த்தும் மீண்டும் ஜோடி சேரவில்லை. பிரியா நடித்துள்ள இங்கிலீஷ் விங்கிலீஷ் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அவர் மேலும் ஒரு இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர தமிழில் தனுஷ் தயாரிக்கும் எதிர் நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறார்.
சித்தார்த் தான் நடித்த மிட்நைட் சில்ட்ரன்ஸ் பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார். சித்தார்த்தும், ஸ்ருதி ஹாசனும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment