தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய சீனுராமசாமி, நீர்பறவை என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில் நாயகனாக விஷ்ணு நடிக்கிறார். விஷ்ணுக்கு ஜோடியாக சுனேனா நடிக்கிறார். இவருடன் தம்பி ராமய்யா, சரண்யா பொன்வண்ணன், "பூ" ராம், பிளாக் பாண்டி, பாரதி கிருஷ்ணகுமார், அருள்தாஸ், தேவராஜ், ரோகிணி போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. நீர்பறவை படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்நிலை படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற அக்டோபர் 10ந் தேதி நடைபெறுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட ஹாரிஸ் ஜெயராஜ் ஆடியோவை பெற்றுக் கொள்கிறார்.
Post a Comment