டாப்சிக்கும் சர்ச்சைக்கும் பூர்வ ஜென்மத் தொடர்பு போல... அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இப்போது சர்ச்சைக்குரியதாக மாறி வருகிறது.
மோகன் பாபு மகன்களோடு இரண்டு படம் நடித்தார். முதல் படம் பண்ணும்போது, மூத்தவர் விஷ்ணுவுடன் காதல் என்று பற்றிக் கொண்டது. இரண்டாவது படம் மஞ்சு மனோஜோடு செய்தார்.
அதன் விளைவாக அவரது பழைய லவ்வர் மகத்தும் மஞ்சு மனோஜும் கட்டிப் புரண்டு உருண்டு அடித்துக் கொண்டது தெரிந்த சங்கதி.
இப்போது மீண்டும் மோகன் பாபு குடும்பத்தினர் தொடர்பாகத்தான் விவகாரம் முளைத்துள்ளது.
ஆனால் இது ஒரு போஸ்டர் விவகாரம் (என்னங்க மேட்டர் சப்புன்னு ஆகிடுச்சா!).
மலையாளத்தில் மம்முட்டி, நதியா, டாப்சி இணைந்து நடித்த ‘ட்வின்ஸ்' படம் தமிழில் ‘புதுவை மாநகரம்' என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தை விளம்பரம் செய்ய டாப்சி படங்களுடன் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதற்கு மனோஜ் மஞ்சுவின் சகோதரி லட்சுமி மஞ்சு, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "ஆதி, டாப்சி நடித்த ‘மண்டல்ல கோதாவரி' என்ற பெயரில் தெலுங்கு படமொன்றை தயாரித்து வருகிறேன். அந்த படத்துக்காக எடுக்கப்பட்ட டாப்ஸி படங்களை புதுவை மாநகரம் போஸ்டர்களில் பயன்படுத்தி உள்ளனர். இது கண்டிக்கதக்கது. இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளேன் என்றார்.
ஆனால் டாப்சியோ, எனக்கு ஒண்ணுமே தெரியாது என்று கூறிவிட்டார் கூலாக!
Post a Comment