மதுரை: 10 ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கப் போகிறார் வித்யா பாலன். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் இந்தப் படத்தை சுடப் போகிறார் இயக்குநர் வி.சி.வடிவுடையான்.
தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கியவர்தான் வடிவுடையான். இப்போது கரணை வைத்து ஒரு புதுப் படத்தை இயக்கப் போகிறார். படத்திற்கு சொக்கநாதன் என்று பெயர்வைத்துள்ளார். இதை தமிழ், இந்தி, தெலுங்கில் எடுக்கிறாராம்.
இந்தப் படத்தில் பெரிய விசேஷம் என்னவென்றால் 10 ஹீரோக்கள் இருக்கிறார்களாம். அதேசமயம் ஹீரோயின் ஒரே ஒருவர்தான், அவர்தான் வித்யா பாலன்.
இது ஒரு அதிரடி சண்டைப் படம். ஹாலிவுட் பாணியில் படத்தை எடுக்கவிருக்கிறாராம் வடிவுடையான். இதற்காக கிராபிக்ஸ் காட்சிகளும் ஏகப்பட்டதைப் படத்தில் திணிக்கவுள்ளனர். இதை ஹாலிவுட்டில் வைத்தே சுடவும் உள்ளாராம் வடிவு.
முதலில் கரீனா கபூரைத்தான் இந்தப் படத்திற்காக பேசி வந்தார்களாம். இருப்பினும் தற்போது வித்யாவை புக் செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்தச் செய்தி உண்மையாக இருந்தால், வித்யா பாலன் நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
'டர்ட்டி' வித்யாவை நல்ல 'வடிவாக' காட்டுங்க வடிவு...!
Post a Comment