ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த ரிபல் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆந்திராவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் ரிபல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ளது.
அமெரிக்காவில் 56 திரையரங்குகளில் ரிபல் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் 50 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு தியேட்டருக்கு 1,662 டாலர் வரை வசூல் செய்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். அமெரிக்காவில் வெளியான தெலுங்குப் படத்தில் இதுவரை நாகர்ஜூனா நடித்த லைப் ஈஸ் பியூட்டிபுல் திரைப்படம்தான் வசூலில் சாதனை செய்ததாக கூறப்பட்டு வந்தது. தற்போது ரிபல் திரைப்படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ரிபல் ரிலீசுக்குப் பின் தற்பொழுது ரிலாக்ஸ் ஆகியுள்ள பிரபாஸ் அடுத்ததாக எஸ். எஸ். ராஜமவுலியின் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.இது ஹீரோவுக்கான கதை என்று ஏற்கனவே ராஜமவுலி கூறியிருப்பதால் அதற்காக தனி கவனம் செலுத்தி நடிக்க இருக்கிறாராம் பிரபாஸ்.
ராஜமவுலியின் இயக்கத்தில் நடிப்பது என்னுடைய லட்சியம். இதனால் திருமணம் பற்றி எல்லாம் இப்போதைக்கு நினைக்கப் போவதில்லை. ராஜமவுலியின் படத்தை முடித்த பின்னர்தான் திருமணம் பற்றி பேசப்போகிறேன் அதுவரைக்கும் ஜாலியாக கதாநாயகிகளுடன் டூயட் பாடப்போகிறேன் என்று கூறியுள்ளார் ரிபல் ஹீரோ பிரபாஸ்.
Post a Comment