தொன்னூறுகளில் தனக்கென தனி பாணியுடன் படமெடுத்து வெற்றி மேல் வெற்றி பெற்ற 'லலலலா...' புகழ் விக்ரமன், சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களத்தில் குதித்துள்ளார்.
ஏற்கெனவே இளமை நாட்கள் என்ற தலைப்பில் படமெடுத்து வருவதாகக் கூறியிருந்தார்
இப்போது நினைத்தது யாரோ என்ற தலைப்பில் புதிய படத்தை இயக்கும் வேலைகளில் தீவிரமாக உள்ளார்.
இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டுமே நடிக்க வைக்கப் போகிறார் விக்ரமன். இதற்காக புதுமுகங்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், தேர்ந்தெடுத்த புதுமுகங்களுக்கு பயிற்சியளித்து பின்னரே படப்பிடிப்புக்குக் கிளம்பப் போகிறாராம்.
அதுமட்டுமில்லாமல் இரண்டு புதிய பாடலாசிரியர்களையும் அறிமுகப்படுத்துகிறார். இவர்கள் அநேகமாக அவரது பேஸ்புக் நண்பர்களாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
நல்ல பாடல்கள், இனிய இசை, உண்மையான காதல்... இதுதான் நினைத்தது யாரோ படம் என்கிறார் விக்ரமன்.
Post a Comment