மும்பை : ஆராத்யாவை புகைப்படம் எடுக்க மீடியாக்கள் விரும்புகின்றன. அது அவர்களின் இயல்பு. அதேபோல் அவளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதும் தாயான எனது கடமை என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.
அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை புகைப்படம், வீடியோ எடுப்பதற்காக பலரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் குழந்தை ஆராத்யாவை வெளியே எடுத்து வந்தாலே முகத்தை மறைத்தது போலத்தான் ஐஸ்வர்யா கொண்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அமிதாப்பச்சன் பிறந்தநாள் விழாவில் கூட ஆராத்யா தென்படவில்லை. ஒரு முறை வெளியே கொண்டு வந்த போதும் கூட புகைப்படம் எடுக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இது குறித்து ஐஸ்வர்யாராயிடம் கேட்கப்பட்டது. ஆராத்யாவை வெளியுலகுக்குக் கொண்டு வந்து, அதனால் அவள் சிரமத்துக்குள்ளாவதை நான் விரும்பவில்லை. அவளை பாதுகாப்பது எனது கடமை என்றார். இது ஒரு சாதாரண தாயின் பாதுகாப்பு உணர்வுதான் என்றும் கூறினார்.
அவளை கவனித்துக்கொள்ள எனக்கு 24 மணிநேரமும் போதவில்லை. அவளுடன் இருக்கும் நேரத்தை நான் மிகவும் விரும்புகிறேன் என்றும் ஐஸ்வர்யா கூறியுள்ளார்.
Post a Comment